திங்கள், 24 ஏப்ரல், 2017

நிமிர்வு சஞ்சிகை ஆசிரியர் செல்வநாயகம் கிரிசாந் அவர்களுடனான நேர்காணல்


நிமிர்வு சஞ்சிகை ஆசிரியர் செல்வநாயகம் கிரிசாந் அவர்களுடனான நேர்காணல்

தமிழ் ஊடகத் திரட்டு (Tamil Media Collective) என்ற அமைப்பினரால் வெளியிடப் பட்டுவரும்நிமிர்வுஎனும் மாத சஞ்சிகையின்  மூன்றாவது இதழ் வெளிவந்துள்ளது.

அதன் ஆசிரியர் செ. கிரிசாந் அவர்களுடனான சுருக்கமான நேர்காணல்.





































சனி, 22 ஏப்ரல், 2017

கல்வி: மாற்றுச் சிந்தனைகள்

ஆயிரம் பூக்கள் மலரட்டும்.





சுகதா மித்ராவின் இந்தப் பரிசோதனை முயற்சி தொடர்கிறது.


ஆப்பிழுத்தல்

நாங்கள் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம் போக வேண்டிய பாதையில், ஒரு மணற்பாங்கான ஒழுங்கையைக் கடந்து செல்ல வேண்டும். நாங்களும் வாகனத்தை மணல் ஒழுங்கைக்குள் செலுத்துகிறோம். எல்லாம் நல்ல படியாகவே நடந்து கொண்டிருக்கின்றது

ஒழுங்கையின் மணற்தன்மை மிகவும் அதிகமான இடத்திற்கு வந்து விடுகிறோம். வாகனத்தை முன் நோக்கிச் செலுத்த முற்படும் போது சக்கரங்கள் மணலில் மாட்டிக் கொள்கின்றன. வாகனத்தை முன்னோக்கிச் செலுத்த முடியவில்லை. சக்கரங்கள் கணிசமான அளவு புதைந்து விட்டன. இப்பொழுது என்ன செய்வது?


 பொதுப் புத்தியின் படி செயற்பட்டால், மணலிலிருந்து ஒருவாறு வெளியே வரும் நோக்கில், நாங்கள் வாகனத்தின் விரைவாக்கியை மேலும் மேலும் ஊன்றி அழுத்துவோம். அழுத்த, அழுத்த வாகனத்தின் சக்கரங்கள் மேலும் மேலும் மண்ணுட் புதையும். நாங்கள் இதுவரை செய்தவற்றையே மீண்டும், மீண்டும் செய்தால், சக்கரங்கள் முழுமையாக மணலினுள் மாட்டிக் கொள்ளும்.

புதை மணலில் சிக்கும் பொழுது, சதுப்பு நிலத்தில் மாட்டிக் கொள்ளும் பொழுது, நீர்ச் சுழியில் அகப்படும் பொழுது, தப்பும் நோக்கில் நாம் செய்யும் பிரயத்தனங்கள், எம்மைத் தப்ப வைப்பதற்குப் பதிலாக, தப்பவே முடியாத நிலைமைக்கு இட்டுச் செல்லும்

இவ்வாறான சந்தர்ப்பங்களில், ‘மரபார்ந்த ஞானம்(Conventional Wisdom), பொருந்தி வராது. அதன்படி செயற்பட்டால், நாம் வழங்கும் தீர்வே பிரச்சனையை மென் மேலும் தீவிரமாக்கும் நிலைக்கு நாம் சென்று விடுவோம். ஒரு பிரச்சனையை, முழுமையாகவும், முறைமை சார்ந்தும் அணுகுபவர்கள் (Wholistic abd Systems Thinkers) இவ்வாறான் தோற்றப் பாட்டை ‘Fixes that Fail’ Archytype என்று வகைப் படுத்துவார்கள்

இப்படியான சந்தர்ப்பங்களில், Counterintuitive ஆன, உள்ளுணர்வு முரண் வாய்ந்த, அணுகு முறையே தேவை.
________________________________________________________________________________

எமது கல்வி நிலை தரம் தாழ்ந்து வருகிறது. பரீட்சை அடைவு மட்டம் குறைவடைகிறது. மாணவர்களின் கற்றற் திறன் குறைவடைகிறது. என்ன செய்ய வேண்டும்?

மேலதிக வகுப்புகளை வைக்க வேண்டும். மேலும் மேலும் கடுமையாகப் படிக்க வேண்டும். இன்னும் இரண்டு மூன்று தனியார் வகுப்புகளுக்குப் போக வேண்டும். முன்னோடிப் பரீட்சைகள் பலவற்றை வைக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், மணலில் சக்கரங்கள் புதைந்தால், வேக முடுக்கியை இன்னும் இன்னும் அழுத்த வேண்டும்!


_________________________________________________________________________________

ஆங்கிலத்தில் அருமையாகச் சொல்வார்கள் ‘If you find yourself in a hole, stop digging’. 


நீங்கள் கிடங்கொன்றில் மாட்டுப் பட்டால்மேலும் கிண்டுவதை நிறுத்துங்கள்!

புதன், 19 ஏப்ரல், 2017

வேண்டும் ஒரு புதிய சொல்

ஒரு புதிய சமூகத் தோற்றப்பாடு (New Social Phenomenon) உருவாகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியே அதன் மூலகாரணம். அது காலவரை சமூகத்தில் அந்தத் தோற்றப்பாடு இருந்ததில்லை. எனவே, அதனைக் குறிக்க மொழியில் வார்த்தைகள் கிடையாது. 
வேண்டும் ஒரு புதிய சொல். அவ்வாறானதொரு புதிய சொல் எவ்வாறு உருவாக்கப் படுகிறது?
ஒரு மொழிச் சமூகமாக எங்களுக்கு இந்தப்பிரச்சனை நிறையவே உள்ளது. 

சிந்திக்கத் தூண்டிய காணொளி இது. இதனை எனக்குத் தெரியப் படுத்திய Singaravelu Kumaravel அவர்களுக்கு நன்றி.


ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

ஹைக்கூக்களாலான காவியங்கள்

காவியங்கள் மிக நீண்டவை. கனதியானவை. அவற்றைப் படிப்பதற்கு நீண்ட நேரம், பொறுமை, குலையாத கருத்தூன்றல் என்பவை அவசியம்.

படிப்பதற்கே இவை தேவையானால், படைப்பதற்கு?



ஹைக்கூக்கள் குறுகியவை. என்றாலும் கருத்துச் செறிவு மிக்கவை. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் ஆற்றல் மிகுந்தவை. தமிழ் மரபின் ஹைக்கூக்களென வள்ளுவர் குறள்களைக் கூறலாம் எனத் தோன்றுகிறது. 



ஹைக்கூக்களாலான காவியங்கள் சாத்தியமானவையா? ஒவ்வொரு ஹைக்கூவும் தன்னளவில் நிறைவும், முழுமையும் கொண்ட செய்திகளைச் சொல்ல, அவற்றின் கூட்டு மிகப் பெரும் முழுமையாய், பெரும் கருத்தியலைச் சொல்ல வல்ல காவியமாய் ஆக முடியுமா?

ஜெயமோகனின் வார்த்தைகளில், 'உதிரிக் கண்டடைதல்களின் குவியல்களால்', 'பெரும் கருத்தியற் கட்டமைப்புகளை' உருவாக்க முடியுமா?

நான் உங்கள் காலத்தின் 'சம காலப் பயணி'. உங்களுடன் இப் பிரபஞ்சத்தில் சம நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவன். இந்தப் பயணம் என்னுள்ளே தோற்றுவிக்கும் எண்ணங்கள், சிந்தனைகள், உணர்வுகள் ஏராளம். இவற்றை நான் என் சக பயணிகளான உங்களுடன் பகிர விரும்புகிறேன். 



என்றாலும், நீண்ட பகிர்வுகளைச் செய்ய எனக்கு நேரமும் இல்லை. அவற்றைப் படிக்க ஏதுவான 'கருத்தூன்று எல்லை' (Attention Span) உங்களுக்கும் இல்லை.

எனவே தான் 'ஹைக்கூக்களாலான காவியங்கள்' பற்றிய சிந்தனை. எனது சிறு பரிசோதனை.

சனி, 8 ஏப்ரல், 2017

மெய்ப்பொருள் காண்பதறிவு

அப்பிள் பழம் என்றால் எனக்குப் பிடிக்கும். லண்டனிலை இருக்கிற என் நண்பனுக்கோ வாழைப் பழம் என்றால் உயிர். என் வீட்டின் கொல்லையிலே வாழை தானாய் வளரும். அவன் வீட்டின் கொல்லையிலே அப்பிள் தானாய் வளரும். நாங்கள் மாற்றி யோசித்தோம். என் வீட்டில் அப்பிளும், அவன் வீட்டில் வாழையும் நடுவதற்கு. அவரவருக்கு அவை தானே பிடிக்கிறது.

நல்லாய்த் தண்ணி விட வேணும், கொஞ்சம் பசளையும் போடோணும்.’ இது தான் இரண்டு பேருடையசிபார்சுசெய்யப் பட்ட வளர்ப்பு முறை.


 என் வீட்டுக் கொல்லையில் அப்பிள் மரம் நட்டாயிற்று. அவன் வீட்டுக் கொல்லையில் வாழை மரம் நட்டாயிற்று

நல்லாய்த் தண்ணியும், கொஞ்சம் பசளையும் போட்டும் அப்பிள் மரத்தை நானும், வாழை மரத்தை அவனும் இழக்க வேண்டியதாயிற்று.

நீங்கள் சிரிப்பீர்கள். ‘மறை கழண்டதுகள்’. விசர் முத்திப் போச்சு. இந்த வெக்கையுக்கை அப்பிள் வருமே? அந்தக் குளிருக்கை வாழை வருமே? எண்டு.

ஓம். நீங்கள் நினைக்கிறது சரி. வெறுமனே தண்ணியும் பசளையும் காணாது தானே? தண்ணியும் பசளையும் முக்கியம் தானெண்டாலும், சரியான சூழலும் தேவையெல்லோ? சூடு, குளிர், வெளிச்சம், இருட்டு, ஈரப்பதன், உலர் நிலை, எல்லாம் அந்தந்தப் பயிர்களுக்கு ஏற்ற மாதிரியிருந்தால் தான் அவை வளரும்.

இவை எல்லாவற்றினதும்சிறப்புக் கலவைஒவ்வொரு சூழலுக்கும் வேறுபடும். பல வேளைகளில் அத்தகைய வேறுபாடுகள் மிகத் தீவிரமாகவிருக்கும். ஒரு பாலை வனத்தில் நிலவும்சிறப்புக் கலவை’, குளிர் வலயத்தின்சிறப்புக் கலவையைவிட முற்றிலும் வேறுபட்டது. குளிர் வலயத்தின்சிறப்புக் கலவைஅயன வலயத்தின்சிறப்புக் கலவையைவிட வேறுபடும்.



எல்லாத் தாவரங்களுக்கும் தண்ணீரும், பசளையும் முக்கியமானவை தான். ஆனால் அவை மட்டும் போதுமானவையல்ல. சூழல் மிக முக்கியமானது. இதனை ஆங்கிலத்தில் ‘Ecosystem’ என்பார்கள்

எவ்வளவு படிப்பிச்சாலும் இவங்களுக்கு ஆங்கிலம் வருகுதில்லை

எத்தினை தரம் படிப்பிச்சாலும் கணிதம் ஏறுதில்லை

வட மாகாணம் தான் கல்வியிலை கடைசி. இந்த முறை . எல் றிசல்ற் படு மோசம்

எப்பிடி அட்வைஸ் பண்ணினாலும் டெக்னிகல் கோர்ஸ் ஒண்டுக்கும் போறாங்களில்லை

எங்கடை சனம் எப்பவும் யாவாரம் தான் செய்யும். புதுசா ஒரு தொழிலும் செய்யத் தெரியாது

எங்கடை அரசாங்க உத்தியோகத்தர்மார் ஒண்டும் செய்யிறாங்களில்லை

சும்மா அதிகாரம் வேணும், அதிகாரம் வேணுமெண்டு சிங்களவனோடை சண்டை பிடிக்கிறாங்கள், குடுத்த அதிகாரத்தை பாவிக்கத் தெரியேல்லை

கல்வி வீழ்ச்சிக்கு பேஸ் புக் தான் காரணம்

வாத்திமாருக்குப் படிப்பிக்கத் தெரியேல்லை

எங்களை நாங்களே குற்றம் சாட்டி, எங்களை நாங்களே மட்டம் தட்டி, ‘இது இருந்தால் இது நடக்கும்’ ‘இது இல்லாத படியால் தான் இது நடக்கேல்லைஎன்று ஒவ்வொன்றுக்கும்ஒரு பெரும் காரணத்தைநாங்கள் தேடுகிறோம்.

தண்ணியும் பசளையும் இருந்தால், இஞ்சை அப்பிளும் அங்கை வாழையும் வரும் எண்டு எதிர்பார்க்கிறது மாதிரி.

பிரச்சனைஒரு பெரும் காரணத்தால்மட்டும் ஏற்படும் என்று அனுமானிக்கிறோம். அதை அகற்றினால் தீர்வு வரும் என்றும் நம்புகிறோம்.



கல்வி வளர்ச்சிக்குஎக்ஸ்றா கிளாஸ்’, புதிதாய்த் தொழில் தொடங்கஎன்றப்றூனர்சிப் றெயினிங்’, டெக்னிகல் கோர்ஸுக்குப் போகச் செய்யகரியர் கைடன்ஸ்’, உத்தியோகத்தர்கள் ஒழுங்காக வேலை செய்யஆளுநர் சந்திரசிறி’, அதிகாரத்தைப் பிரயோகிக்கநியதிச் சட்டங்களை உருவாக்கல்’, மாணவர்களை ஒழுங்காக்கபேஸ் புக்கைத் தடை செய்தல்’, வாத்திமாரைப் படிப்பிக்கச் செய்யதண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றம்என எங்களிடம்ஒவ்வொரு பெரும் காரணத்திற்கும்’ ‘ஒவ்வொரு பெரும் தீர்வும்உள்ளது.

மறை கழண்டதுகள்’. விசர் முத்திப் போச்சு. இந்த வெக்கையுக்கை அப்பிள் வருமே? அந்தக் குளிருக்கை வாழை வருமே? என்று சொன்ன ஞானம், இதுகளைச் சொல்லும் போது எங்களிடம் இருப்பதில்லை.

பிரச்சனையும் தீர்வும்தண்ணியிலும் பசளையிலும்மட்டுமில்லையென்றால், ‘Ecosystem’ எப்பிடியிருக்குது என்பதை நோண்டத் தொடங்க வேணும். பொருத்தமான ‘Ecosystem’ இல்லையெண்டால் அதை முதலில் உருவாக்க வேணும். கஸ்டம் தான். ஆனா வேறை வழியில்லை.


திங்கள், 3 ஏப்ரல், 2017

வேடிக்கை மனிதரைப் போலே நாம் வீழ்வோம்

அறிவு உலக மயமாகிவிட்டது எனச் சொல்கிறார்கள். உண்மைதான் போலிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு விடயத்தைப் பற்றி அறிய வேண்டுமெனின் அதனைத் துறைபோகக் கற்றவர்களைத் தேடிக் கண்டடைந்து அவர்கள் தாம் அறிந்தவற்றைப் பகிர விரும்பினால் மட்டும் அவர்களிடமிருந்து அவ் விடயத்தைக் கற்றுக் கொள்ள முடியுமாயிருந்தது.

அல்லது செழுமையான நூல் நிலையங்களைத் தேடிக் கண்டடைந்து, நூல்களைத் துருவி ஆராய்ந்து, நாம் அறிய விரும்பியவற்றைக் கற்றுக் கொள்ளக் கூடியதாகவிருந்தது.

இவ் வழி முறைகள் எல்லாருக்கும் எட்டக் கூடியதாகவும் இருந்ததில்லை.

இன்று அவ்வாறல்ல. பல விடயங்களை மிக இலகுவாக இணைய வழி மூலம் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கிறது. தொலைவிலிருக்கும் துறை போகக் கற்றவர்களைத் தொடர்பு கொண்டு விடயங்களை அறியக் கூடியதாகவிருக்கிறது. பதிப்பிக்கப் பட்ட அனைத்து அறிவுத் தேட்டங்களையும் எண்மிய வழியில் பெறக் கூடியதாகவிருக்கிறது.

நல்ல பல விடயங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது எமக்குத் தெரிந்திருக்கிறது. நல்லவை அல்லாதவற்றை எவ்வாறு அகற்ற வேண்டும் என்பதுவும் எமக்குத் தெரிந்திருக்கிறது.

என்றாலும் நல்லவை நடக்கவுமில்லை. அல்லவை அகலவுமில்லை.


ஏனென்றால், நாம் அறிந்திருக்கும் அளவுக்குக் கரிசனை கொள்வதில்லை. இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? கூட வந்த குரங்காண்டால் என்ன? என்ற மனநிலை. 

கரிசனையற்றிருந்தால் அறிந்திருத்தலும், அறியாதிருத்தலும் சர்வ சமன்.

ஆகையினால் கல்விக் கூடங்களை இடித்து விடுவோம். நூலகங்களைக் கொழுத்தி விடுவோம். இணையங்களை அறுத்து விடுவோம். 

வேப்ப மரத்தை நோய் கொள்ளட்டும். வைத்தியரைப் பாய் கொள்ளட்டும். காவல் காத்த அய்யனாரைக் களவு கொள்ளட்டும். 

நல்லதோர் வீணை செய்வோம். நலங்கெடப் புழுதியிலெறிவோம்.

வேடிக்கை மனிதரைப் போலே நாம் வீழ்வோம்.

அனைத்தையும் அறிந்திருப்போம். கரிசனையுறோம்.